184. யானை புக்க புலம்! பாடியவர்: பிசிராந்தையார். பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி. திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ. காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே, மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே, வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம்போலத், தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
புறநானூறு > பாடல்: 184
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக