185. ஆறு இனிது படுமே! பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி (இ·து உலகாளும் முறைமையைக் கூறியதாம்.) கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின், ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே; உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும், பகைக்கூழ் அள்ளற் பட்டு, மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.
புறநானூறு > பாடல்: 185
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக