186. வேந்தர்க்குக் கடனே! பாடியவர்: மோசிகீரனார் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி (வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது. ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆம்.) நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. புறநானூறு > பாடல்: 186