195. எல்லாரும் உவப்பது! பாடியவர்: நரிவெரூஉத் தலையார் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி பல்சான் றீரே! பல்சான் றீரே! கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள், பயனில் மூப்பின், பல்சான் றீரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்பது ; அன்றியும், நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.
புறநானூறு > பாடல்: 195
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக