196. குறுமகள் உள்ளிச் செல்வல்! பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை. ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும், ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே; இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில் அத்தை அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும் சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால், நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும், வெயிலென முனியேன், பனியென மடியேன், கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை, நாணலது இல்லாக் கற்பின் வாணுதல் மெல்லியல் குறுமகள் உள்ளிச் செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!
புறநானூறு > பாடல்: 196
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக