207. வருகென வேண்டும்! பாடியவர்: பெருஞ்சித்திரனார். பாடப்பட்டோன்: இளவெளிமான். திணை: பாடாண்: துறை: பரிசில். எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, பருகு அன்ன வேட்கை இல்அழி, அருகிற் கண்டும் அறியார் போல, அகம்நக வாரா முகன்அழி பரிசில் தாள்இலாளர் வேளார் அல்லர்? வருகென வேண்டும் வரிசை யோர்க்கே பெரிதே உலகம்; பேணுநர் பலரே; மீளி முன்பின் ஆளி போல, உள்ளம் உள்அவிந்து அடங்காது, வெள்ளென நோவா தோன்வயின் திரங்கி, வாயா வன்கனிக்கு உலமரு வோரே.
புறநானூறு > பாடல்: 207
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக