217. நெஞ்சம் மயங்கும்! பாடியவர்: பொத்தியார் திணை: பொதுவியல் துறை: கையறுநிலை குறிப்பு: கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்; அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது. நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்; அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, இசைமரபு ஆக, நட்புக் கந்தாக, இனையதோர் காலை ஈங்கு வருதல்; ‘வருவன்’ என்ற கோனது பெருமையும், அது பழுது இன்றி வந்தவன் அறிவும், வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே; அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும் சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை அன்னோனை இழந்தஇவ் வுலகம் என்னா வதுகொல்? அளியது தானே! புறநானூறு > பாடல்: 217