218. சான்றோர்சாலார் இயல்புகள்! பாடியவர்: கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம். திணை: பொதுவியல் துறை: கையறுநிலை குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது. பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய மாமலை பயந்த காமரு மணியும், இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து, அருவிலை நன்கலம் அமைக்கும் காலை, ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே.
புறநானூறு > பாடல்: 218
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக