245. என்னிதன் பண்பே? பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை திணை: பொதுவியல் துறை: கையறுநிலை யங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே, உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்? கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி, ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ; இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே!
புறநானூறு > பாடல்: 245
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக