246. பொய்கையும் தீயும் ஒன்றே! பாடியவர்: பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள் பல்சான் றீரே ; பல்சான் றீரே செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே; துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது, அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆகப், பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம் பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
புறநானூறு > பாடல்: 246
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக