299. கலம் தொடா மகளிர்! பாடியவர்: பொன் முடியார் திணை: நொச்சி துறை: குதிரை மறம் பருத்தி வேலிச் சீறூர் மன்னன் உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி, கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ_ நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின், தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, அணங்குஉடை முருகன் கோட்டத்துக் கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.
புறநானூறு > பாடல்: 299
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக