302. வேலின் அட்ட களிறு? பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்). திணை: தும்பை துறை : குதிரை மறம் வெடிவேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும், மாவே; பூவே, விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட; நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய, நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், விண்ணிவர் விசும்பின் மீனும், தண்பெயல் உறையும், உறையாற் றாவே.
புறநானூறு > பாடல்: 302
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக