301. அறிந்தோர் யார்? பாடியவர்: ஆவூர் மூலங்கிழார் திணை: தும்பை துறை : தானை மறம் பல் சான்றீரே ! பல் சான்றீரே! குமரி மகளிர் கூந்தல் புரைய, அமரின் இட்ட அருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் றீரே! முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்; ஒளிறு ஏந்து ,மருப்பின்நும் களிறும் போற்றுமின்! எனைநாள் தங்கும்நும் போரே, அனைநாள் எறியர் எறிதல் யாவணது? எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால் அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே! ‘பலம்’ என்று இகழ்தல் ஓம்புமின்! உதுக்காண் நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி, வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி, எல்லிடைப் படர்தந் தோனே ; கல்லென வேந்தூர் யானைக்கு அல்லது, ஏந்துவன் போலான், தன் இலங்கிலை வேலே!
புறநானூறு > பாடல்: 301
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக