316. சீறியாழ் பனையம்! பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் திணை: வாகை துறை : வல்லாண் முல்லை கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக், காட்டொடு மிடைந்த சீயா முன்றில், நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே! அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்; நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு ஈவது இலாளன் என்னாது, நீயும்; வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக், கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச், சென்று வாய் சிவந்துமேல் வருக_ சிறுகண் யானை வேந்து விழுமுறவே.
புறநானூறு > பாடல்: 316
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக