318. பெடையடு வதியும்! பாடியவர்: பெருங்குன்றூர் கிழார் திணை: வாகை துறை : வல்லாண் முல்லை கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க, மயில்அம் சாயல் மாஅ யோளடு பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே_ மனைஉறை குரீஇக் கறையணற் சேவல், பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான் குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப், பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் புன்புறப் பெடையடு வதியும் யாணர்த்து ஆகும்_வேந்துவிழு முறினே.
புறநானூறு > பாடல்: 318
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக