319. முயல் சுட்டவாயினும் தருவோம்! பாடியவர்: ஆலங்குடி வங்கனார் திணை: வாகை துறை : வல்லாண் முல்லை பூவற் படுவிற் கூவல் தோண்டிய செங்கண் சின்னீர் பெய்த சீறில் முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி, யாம் க·டு உண்டென, வறிது மாசின்று; படலை முன்றிற் சிறுதினை உணங்கல் புறவும் இதலும் அறவும் உண்கெனப் பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால், முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண! கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும் சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர், வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின் பாடினி மாலை யணிய, வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே.
புறநானூறு > பாடல்: 319
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக