325. வேந்து தலைவரினும் தாங்கம்! பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் திணை: வாகை துறை : வல்லாண் முல்லை களிறுநீ றாடிய விடுநில மருங்கின், வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக், குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின், செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல் முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை, முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர் உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச் சீறில் முன்றில் கூறுசெய் திடுமார், கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம் மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும் அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே.
புறநானூறு > பாடல்: 325
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக