326. பருத்திப் பெண்டின் சிறு தீ! பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் திணை: வாகை துறை : மூதின் முல்லை ஊர்முது வேலிப் பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச், சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக், கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும் அருமிளை இருக்கை யதுவே -மனைவியும், வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது, படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும் அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து அண்ணல் யானை அணிந்த பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.
புறநானூறு > பாடல்: 326
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக