331. இல்லது படைக்க வல்லன்! பாடியவர்: உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்). திணை: வாகை துறை : மூதின் முல்லை கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல் வில்லேர் வாழ்க்கைச், சீறூர் மதவலி நனிநல் கூர்ந்தனன் ஆயினும், பனிமிகப், புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும் கல்லா இடையன் போலக், குறிப்பின் இல்லது படைக்கவும் வல்லன் ; உள்ளது தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள், நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும் இற்பொலி மகடூஉப் போலச், சிற்சில் வரிசையின் அளக்கவும் வல்லன்; உரிதினின் காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் போகுபலி வெண்சோறு போலத் தூவவும் வல்லன், அவன் தூவுங் காலே.
புறநானூறு > பாடல்: 331
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக