332. வேல் பெருந்தகை உடைத்தே! பாடியவர்: விரியூர் கிழார் திணை: வாகை துறை : மூதின் முல்லை பிறர்வேல் போலா தாகி, இவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே; இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; மங்கல மகளிரொடு மாலை சூட்டி, இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத், தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து, மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு, இருங்கடல் தானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.
புறநானூறு > பாடல்: 332
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக