333. தங்கனிர் சென்மோ புலவீர்! பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: வாகை துறை : மூதின் முல்லை நீருள் பட்ட மாரிப் பேருறை மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண, கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல் உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும் தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், ‘உண்க’என உணரா உயவிற்று ஆயினும், தங்கனீர் சென்மோ, புலவீர்! நன்றும்; சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி, வரகும் தினையும் உள்ளவை எல்லாம் இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக், குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின், குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து, சிறிது புறப்பட்டன்றோ விலளே; தன்னூர் வேட்டக் குடிதொறுங் கூட்டு .. .. .. .. .. .. .. உடும்பு செய் பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா, வம்பணி யானை வேந்துதலை வரினும், உண்பது மன்னும் அதுவே; பரிசில் மன்னும், குருசில்கொண் டதுவே.
புறநானூறு > பாடல்: 333
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக