352. தித்தன் உறந்தை யன்ன! பாடியவர்: பரணர் திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி குறிப்பு: இடையிடை சிதைவுற்ற செய்யுள் இது. சிறப்பு: தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம். தேஎங் கொண்ட வெண்மண் டையான், வீ . . . . . கறக்குந்து; அவல் வகுத்த பசுங் குடையான், புதன் முல்லைப் பூப்பறிக் குந்து; ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் குன்றுஏறிப் புனல் பாயின் புறவாயால் புனல்வரை யுந்து; . . . . . நொடை நறவின் மாவண் தித்தன் வெண்ணெல் வேலி உறந்தை அன்ன உரைசால் நன்கலம் கொடுப்பவும் கொளாஅ னெ. . . . . . .ர்தந்த நாகிள வேங்கையின், கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின் மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும் சிறுகோல் உளையும் புரவி¦ . . . . . . . . . . . . . . . . .யமரே.
புறநானூறு > பாடல்: 352
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக