353. 'யார் மகள்?' என்போய்! பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல், ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத், தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித், தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை, வினவல் ஆனா வெல்போர் அண்ணல்! ‘யார்மகள்? என்போய்; கூறக் கேள், இனிக்; குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத் தொல்குடி மன்னன் மகளே; முன்நாள் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு . . . . . . . . . . . . . . . . . உழக்குக் குருதி ஓட்டிக், கதுவாய் போகிய நுதிவாய் எ·கமொடு, பஞ்சியும் களையாப் புண்ணர். அஞ்சுதகவு உடையர், இவள் தன்னை மாரே.
புறநானூறு > பாடல்: 353
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக