354. நாரை உகைத்த வாளை! பாடியவர்: பரணர் திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா நிரைகாழ் எ·கம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத், தந்தையும் பெயர்க்கும்; வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக், கயலார் நாரை உகைத்த வாளை புனலாடு மகளிர் வளமனை ஒய்யும் ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ- சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை; வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே?
புறநானூறு > பாடல்: 354
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக