384. நெல் என்னாம்! பொன் என்னாம்! பாடியவர்: புறத்திணை நன்னாகனார். பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான். திணை: பாடாண். துறை: கையறுநிலை. மென் பாலான் உடன் அணை இ, வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை அறைக் கரும்பின் பூ அருந்தும்; வன் பாலான் கருங்கால் வரகின் . . . அங்கண் குறுமுயல் வெருவ, அயல கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து; விழவின் றாயினும், உழவர் மண்டை இருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து; . . . . . கிணையேம் பெரும! நெல் என்னாம், பொன் என்னாம், கனற்றக் கொண்ட நறவு என்னும், . . . . மனை என்னா, அவை பலவும் யான் தண்டவும், தான் தண்டான், நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை மண் நாணப் புகழ் வேட்டு, நீர் நாண நெய் வழங்கிப், புரந்தோன் எந்தை; யாம் எவன் தொலைவதை; அன்னோனை உடையேம் என்ப; இனி வறட்கு யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும். வந்த வைகல் அல்லது, சென்ற எல்லைச் செலவு அறி யேனே!
புறநானூறு > பாடல்: 384
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக