385. காவிரி அணையும் படப்பை! பாடியவர்: கல்லாடனார். பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை. திணை: பாடாண். துறை: வாழ்த்தியல். வெள்ளி தோன்றப், புள்ளுக்குரல் இயம்ப, புலரி விடியல் பகடுபல வாழ்த்தித், தன்கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி, வறன்யான் நீங்கல் வேண்டி, என் அரை நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து, வெளியது உடீஇ, என் பசிகளைந் தோனே; காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி அம்பர் கிழவோன். நல்அரு வந்தை, வாழியர்; புல்லிய வேங்கட விறல்வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே!
புறநானூறு > பாடல்: 385
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக