4. தாயற்ற குழந்தை! பாடியவர்: பரணர். பாடப்பட்டோன் : சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி. திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை. சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும். வாள்,வலந்தர, மறுப் பட்டன செவ் வானத்து வனப்புப் போன்றன! தாள், களங்கொளக், கழல் பறைந்தன கொல் ஏற்றின் மருப்புப் போன்றன; தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ, நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; மாவே, எறிபதத்தான் இடங் காட்டக், கறுழ் பொருத செவ் வாயான், எருத்து வவ்விய புலி போன்றன; களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய், நுதி மழுங்கிய வெண் கோட்டான், உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, மாக் கடல் நிவந் தெழுதரும் செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ! அனையை ஆகன் மாறே, தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
புறநானூறு > பாடல்: 4
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக