5. அருளும் அருமையும்! பாடியவர்: நரிவெரூஉத் தலையார். பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல். திணை: பாடாண். துறை: வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம். சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி. எருமை அன்ன கருங்கல் இடை தோறு, ஆனிற் பரக்கும் யானைய, முன்பின், கானக நாடனை!நீயோ, பெரும! நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்; அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல், குழவி கொள் பவரின், ஓம்புமதி! அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.
புறநானூறு > பாடல்: 5
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக