308. நாணின மடப்பிடி! பாடியவர்: கோவூர் கிழார் திணை: வாகை துறை : மூதின் முல்லை பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின், மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ் நன்மை நிறைந்த நயவரு பாண! சீறூர் மன்னன் சிறியிலை எ·கம் வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே; வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே; உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல் ஓச்சினன் துரந்த காலை, மற்றவன் புன்தலை மடப்பிடி நாணக், குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.
புறநானூறு > பாடல்: 308
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக